யசுனாரி கவாபட்டா கதைகள் வரிசையில் கதை 1 துறைமுக நகரம்(HARBOR TOWN) இந்த துறைமுக நகரம் ஆர்வமூட்டக் கூடிய ஒன்று. இங்கு இருக்கும் விடுதிக்கு மரியாதைக்குரிய மனைவிமார்களும் பெண்களும் வருவார்கள். மேலும் இந்த விடுதியில் ஒரு விருந்தினன் இருக்கும் வரை அவனுடன் ஒரு பெண் தங்கியிருப்பாள். அவள் அவன் காலை தூங்கி எழுந்ததிலிருந்து மதியம் சாப்பிடும் போதும் நடக்கும் போதும் அவனருகிலேயே இருப்பாள். அவர்களைப் பார்க்கும் போது தேனிலவை அனுபவிக்கும் புது மண ஜோடிகள் போலவே இருப்பார்கள். இப்போதும் கூட அவன் அவளை அருகிலிருக்கும் வெப்ப நீரூற்றுள்ள விடுதிக்கு அழைத்துச் செல்வதாக சொல்லும் பொழுது அவள் ஒரு பக்கமாக தன் தலையை சாய்த்துக் கொண்டு யோசிக்கிறாள்.இளம் பெண்ணாண அவளிடம் அவன் அந்நகரத்தில் அருகிலிருக்கும் ஒரு வீட்டை அவளுக்காக வாடகைக்கு எடுப்பதாக சொல்லும் போது அவள் பெரும்பாலும் மகிழ்ச்சியோடு இப்படித்தான் சொல்கிறாள் “அதிக காலத்திற்கு செல்லாத வரை அதாவது ஒரு வருடம் அல்லது ஆறு மாதம் என்றோ காலம் கடத்தாத வரை நான் உன் மனைவியாக இருப்பேன்’’ என்று. அன்று ஒரு நாள் காலை வேளையில் அவன் படகில் ஏறி அந்த இடத்தை விட்டு கிளம்பிச் செ
இடுகைகள்
ஜனவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது