யசுனாரி கவாபட்டா கதைகள் வரிசையில்


கதை  1

துறைமுக நகரம்(HARBOR TOWN)

இந்த துறைமுக நகரம் ஆர்வமூட்டக் கூடிய ஒன்று. இங்கு இருக்கும் விடுதிக்கு மரியாதைக்குரிய மனைவிமார்களும் பெண்களும் வருவார்கள். மேலும் இந்த விடுதியில் ஒரு விருந்தினன் இருக்கும் வரை அவனுடன் ஒரு பெண் தங்கியிருப்பாள். அவள் அவன் காலை தூங்கி எழுந்ததிலிருந்து மதியம் சாப்பிடும் போதும்  நடக்கும் போதும் அவனருகிலேயே இருப்பாள். அவர்களைப் பார்க்கும் போது தேனிலவை அனுபவிக்கும் புது மண ஜோடிகள் போலவே இருப்பார்கள். 

இப்போதும் கூட அவன் அவளை அருகிலிருக்கும் வெப்ப நீரூற்றுள்ள விடுதிக்கு அழைத்துச் செல்வதாக  சொல்லும் பொழுது அவள் ஒரு பக்கமாக தன் தலையை சாய்த்துக் கொண்டு யோசிக்கிறாள்.இளம் பெண்ணாண அவளிடம் அவன் அந்நகரத்தில் அருகிலிருக்கும் ஒரு வீட்டை அவளுக்காக  வாடகைக்கு எடுப்பதாக சொல்லும் போது அவள் பெரும்பாலும் மகிழ்ச்சியோடு இப்படித்தான் சொல்கிறாள் “அதிக காலத்திற்கு செல்லாத வரை அதாவது ஒரு வருடம் அல்லது ஆறு மாதம் என்றோ காலம் கடத்தாத வரை நான் உன் மனைவியாக இருப்பேன்’’ என்று.

 அன்று ஒரு நாள் காலை வேளையில் அவன் படகில் ஏறி அந்த இடத்தை விட்டு கிளம்பிச் செல்வதற்காக தன்னுடைய பொருட்களை அவசரம் அவசரமாக பெட்டியில் போட்டு அடைத்துக் கொண்டிருந்தான்.அப்போது அவனுக்கு உதவி செய்துக் கொண்டிருந்தவள் அவனிடம்

“எனக்கு நீ ஒரு கடிதம் எழுத மாட்டாயா ? என்று கேட்டாள்.

என்ன ? இப்போதா? என்றான் அவன்.

ஆனால்  இதற்கு மேல் நான் உன் மனைவியாக இருக்க மாட்டேன் எனவே பரவாயில்லை  என்றாள் அவள்.

நீ இங்கிருந்தவரை எல்லா நேரமும் நான் உன் பக்கத்திலேயே இருந்தேன் .

நான் அப்படியில்லையா?அதைத் தவிர  வேறெந்த தவறும் நான் செய்யவில்லையே.

ஆனால் இப்போது இதற்கு மேல் நான் உன் மனைவியாக தொடர முடியாது என்றாள்.

அப்படியா அது ? அப்படியா அது ? என்று  அவன் அவளுக்காக வேறொரு மனிதனுக்கு கடிதம் எழுதினான். அவன் யாரென்றால் ஆதாரப்பூர்வமாக இவனைப் போலவே அந்த விடுதியில்  மாதத்தின் பாதி   நாட்களைஅவளுடன் கழித்தவன். பிறகு..

யாரோ மற்றொருவன் இந்த காலைப் பொழுதில் படகில் கிளம்பும் போது? இனி  நீ அவனுடைய மனைவியாய் தொடர முடியாத என்ற போதும் ?எனக்கு ஒரு கடிதம் கூடவா அனுப்ப மாட்டாய் ? என்றான் அவன்.








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கு.ப.ரா எனும் மாயோன்