கதை 2 மஞ்சள் குருவிகள் (CANARIES) (யசுனாரி கவாபட்டா) நான் செய்துகொண்ட சத்தியத்திற்கு புறம்பாக மீண்டும் ஒரு முறை உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறேன். போன வருடம் உங்களிடமிருந்து பெற்ற மஞ்சள் குருவிகளை இனி நான் நீண்ட காலத்திற்கு என்னுடன் வைத்திருக்க முடியாது. எப்பொழுதுமே என் மனைவிதான் அவற்றைக் கவனித்து கொண்டிருந்தாள். என்னுடைய வேலையானது அவற்றை வெறுமனே பார்ப்பதும் அவற்றைப் பார்க்கும் போது உங்களைப் பற்றி நினைப்பதும் மட்டும்தான். நீங்கள் தானே சொன்னீர்கள் எனக்கென்று ஒரு கணவன் இருக்கிறான் உங்களுக்கென்று ஒரு மனைவி இருக்கிறாள் இனி நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதை நிறுத்தியாக வேண்டுமென்று. உங்களுக்கு மனைவி இல்லாமல் இருந்தால் மட்டுமே நாம் இனி ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள முடியும் என்று. .எனவே நான் என் நினைவாக உங்களுக்கு இந்த மஞ்சள் குருவிகளைத் தருகிறேன் என் ஞாபகம் வரும் போதெல்லாம் அவற்றை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம் . இப்பொழுது இந்த மஞ்சள் குருவிகள் இரண்டும் சோடிகளாகிவிட்டன. ஆனால் வளர்ப்பு பிராணிகள் விற்கும் கடைக்காரன் அவற்றைத் தரும் போது ஆண் குருவியில் ஒன்றும் பெண் குருவியில் ஒன்றும் என்று அ
இடுகைகள்
பிப்ரவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது