கோப்பையில் வழியும் இரத்தம் புத்தரை பின்பற்றாத ஒருவன் மிக மெதுவாக அழத் தெரிந்தவன் மிக அழகாக சிரிப்பவனாகவும் இருக்கிறான் அவன் யாருடனும் பேச விரும்பாதவன் வெறுமனே அவன் அருகில் அமர்ந்து எழுந்து போனால் போதும் அவனுக்கு . அவனை பெரும்பாலும் நீங்கள் தனியாகவே பார்க்க முடியும் அவன் தனியாகத்தான் வளர்ந்தான் தலைப்பிரட்டை தவளையானதைப் போல . அவன் மிக அழகாகச் சிரிப்பவன் தனிமையிலும் கூட . அவனுக்கென்று யாரிடமும் எதுவும் இல்லை ஆனாலும் அவன் தன்னோடு இணையும் எல்லா உடலிலும் எதையோ ஒன்றை தேடுவதைப் போலவே பாசாங்கு செய்கிறான் . அவன் தன்னையே காகிதங்களில் கப்பல் பறவை கத்தி பூ என்று எல்லாமுமாக மாற்றி செய்யக் கூடியவன் தானும் ஒரு காலத்தில் அந்தக் காகிதங்களில் இருந்த மரங்கள் என்று நினைத்து மகிழ்ந்து போவான் . நேற்று அவன் அம்மாவின் சவக்குழியை அவனே தான் தோண்டினான் அப்பாவிற்காகவும் ஒன்றை தோண்டி வைத்திருக்கிறான் அவருக்கு ஜீவ சமாதி அடைவதில் விருப்பமா என்று க
இடுகைகள்
மார்ச், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது