அணுக்களும் மூலக்கூறுகளும்
அசோக் சார் என்றால் சிலருக்கு பயம் சிலருக்கு சிரிப்பு . அவரைப் பற்றி பள்ளிக் கூடத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பேசிக்கொள்வார்கள். ஆனால் உண்மையாகவே அவரை நெருங்கி பார்த்தவர்களுக்கு தான் தெரியும் அவர் வெறுமனே தனக்குள்ளாகவே எல்லாவற்றையும் புதைத்துக் கொள்கிற, யாரிடமும் அவ்வளவு நெருங்கி பழகிவிடாத கூச்ச சுபாவி என்று. அவர் எப்போதும் கடந்த காலத்தின் கசப்புகளோடு மல்லுக்கட்டிக் கொண்டு இருப்பவர். நான்கு நாட்களாக அவருக்கு மனசு சரியில்லை ஆனால் பள்ளிக்கூடத்திற்கு விடுப்பு எடுக்காமல் வந்து கொண்டுதானிருக்கிறார். வீட்டில் அவரும் அவருடைய அம்மாவும் மட்டுமே. அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற கொள்கையோ இலட்சியமோ எதுவும் அவருக்கில்லை. அவருக்காக மெனக்கெட்டு பெண் பார்க்க யாருமில்லை அவனுடைய மாமாவும் "கிறுக்குப் பய இவனுக்கு பொண்ணு பாத்து வச்சுட்டு எவன் கொலையில நிக்குறது" என்று வெளிப்படையாகவே அவர் அம்மாவிடம் சொல்லிவிட்டு போனவர்தான் இரண்டு மாதத்திற்கு முன்பு அவர் பெண்ணுடைய கல்யாணத்திற்கு பத்திரிக்கை வைக்கத் தான் திரும்ப வந்தார். அசோக் சாருக்கு அதைப் பற்றியெல்லாம்