பிசாசுகளின் காலம் நோய்மையின் இரவுகள் வீதி தோறும் இரைக்கின்றன கடும் சாக்காட்டின் கசப்பேறிய வாசனையை படுக்கைகள் இல்லை படுக்கைகள் இல்லை படுக்கைகள் இல்லை படுக்கைகள் இல்லை மனைவிகள், குழந்தைகள், அம்மாக்கள்,அப்பாக்கள், சகோதரர்கள், சகோதரிகள் கடைசியாக ஒரு முறை நிம்மதியாக மூச்சு விட முடியாமல் கண்கள் அகல விரிந்திருக்க முறையிட்டபடியே மரணிக்கிறார்கள் எல்லா இடங்களிலும் யாரோ ஒருவர் மட்டுமே இருக்கிறார். எல்லா இடங்களிலும் யாரோ ஒருவரின் புகைப்படம் மட்டுமே இருக்கிறது எல்லா இடங்களிலும் யாரோ ஒருவரின் குரல் மட்டுமே கேட்கிறது எல்லா இடங்களிலும் யாரோ ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும் என்றே கட்டளையிடப் பட்டிருக்கிறது. இந்த நாட்களின் கருமையை எதைப் பூசி அழிப்பது? இந்த நாட்களின் பசியை எதைத் தின்று ஆற்றுவது ? இந்த நாட்களின் அவமானங்களை எதைக் கொண்டு துடைப்பது ? இந்த நாட்களில் மரணித்தவர்களை எப்படி உயிர்ப்பிப்பது? நதிக்கரைகள் நாகரீகமற்று பிணங்களை தின்று மலடாகின்றன பொய்களை கேட்டு சலித்துப் போன பிணங்கள் மிதிவண்டியிலிருந்து ஆம்புலேன்ஸிலிருந்து தள்ளு வண்டியிலிருந
இடுகைகள்
மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கொடியில் காயும் நதி தட்டையான உலகமல்ல.தட்டையான உயிரிகள் மேய்ந்து திரியும் இடம் அதுவல்ல காலம்,வெளி புணரும் ஒரு மேலோடு. அங்கே குதிரைகள் தங்கள் வண்ண வால்களை அசைத்தபடி மேய்கின்றன. என் காகிதங்களில் ஒட்டுகின்றன அவற்றின் குளம்புகளின் ஓசை . நான் வெறும் கவிஞன் இசை ஞானி அல்ல. நீ வேறொரு உடலோடு வா வேறொரு நாளில் நாம் இந்த பிரபஞ்ச வெளியில் ஒளியாக நீந்தி உயிர்த்தரிப்போம். நான் இப்போது வெறுமனே இலையில் முறியும் பச்சையம். வெயில் குடிக்கும் வெறும் நதி. முப்பரிமாண சதைகளை பிடித்து விளையாடும் ஆலிலை கிருஷ்ணன் அறிவான் எனக்கு ஆயிரம் நாமங்கள் எதற்கென்று . நீ என்னை எந்த பெயரிலும் அழைக்கலாம் எவரும் உயிர்தெழப் போவதில்லை அதைக் கேட்டு. இரவை உலர்த்தி கொடியில் போடு. நிகழ்பவை எல்லாம் அதிசயம்தான்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
சிறுகதை டோன்ட் டச் ( விருட்சன்) வேலு சோடா கம்பெனியைத் தாண்டி நடந்து கொண்டிருந்தான். இப்போதும் அங்கே சோடா குடிக்க,அதனோடு ஒட்டியிருந்த சிறிய கடையில் சில்லறை சாமான்கள் வாங்க ஆட்கள் வந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது கடையின் வாசலைப் பார்த்தபோதே தெரிந்தது.அவனுடைய வீடு அந்த சோடா கம்பெனியை ஒட்டிய காலணியில் தான் இருந்தது. அனைவருக்கும் பொதுவான கழிவறை உள்ள காலணி அது. அவரவர் வீட்டிற்கு முன்பாக ஒரு சாக்கடை குழியும் இருக்கும். குளிக்க போவதற்கு முன்னால் அந்த குழியிலிருந்து தண்ணீரை மொண்டு ரோட்டில் ஊற்ற வேண்டும். ரோட்டில் போகும் நபர்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு நமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதைப் போலத்தான் விலகிப் போயாக வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் சாக்கடை வசதியோ கழிவறை வசதியோ அத்தனை முக்கியமான ஒன்றென்று அங்கே யாரும் கருதவில்லை. எல்லா நாத்தங்களையும் சகஜமாக எடுத்துக் கொண்டு உண்டு உறங்கி புணர்ந்து இறந்தும் போய்க் கொண்டிருந்த காலமது. ஆனால் வேலு வீட்டிற்கு வடக்கே இருக்கும் செட்டியார் மட்டும் சாக்கடைத் தண்ணீர் வேலு வீட்டு குழியிலிருந்து தன் வீட்டுக் குழியில் வழிவதை அத்தனை லேசில் விட்டுவிட மாட்ட