கொடியில் காயும் நதி
தட்டையான உலகமல்ல.தட்டையான உயிரிகள் மேய்ந்து திரியும் இடம் அதுவல்ல காலம்,வெளி புணரும் ஒரு மேலோடு. அங்கே குதிரைகள் தங்கள் வண்ண வால்களை அசைத்தபடி மேய்கின்றன. என் காகிதங்களில் ஒட்டுகின்றன அவற்றின் குளம்புகளின் ஓசை . நான் வெறும் கவிஞன் இசை ஞானி அல்ல. நீ வேறொரு உடலோடு வா வேறொரு நாளில் நாம் இந்த பிரபஞ்ச வெளியில் ஒளியாக நீந்தி உயிர்த்தரிப்போம். நான் இப்போது வெறுமனே இலையில் முறியும் பச்சையம். வெயில் குடிக்கும் வெறும் நதி. முப்பரிமாண சதைகளை பிடித்து விளையாடும் ஆலிலை கிருஷ்ணன் அறிவான் எனக்கு ஆயிரம் நாமங்கள் எதற்கென்று . நீ என்னை எந்த பெயரிலும் அழைக்கலாம் எவரும் உயிர்தெழப் போவதில்லை அதைக் கேட்டு. இரவை உலர்த்தி கொடியில் போடு. நிகழ்பவை எல்லாம் அதிசயம்தான்.
கருத்துகள்
கருத்துரையிடுக