அரூப சந்திப்பு
முன் கதை சுருக்கம் 1:
தமிழ் திரைப்படம் ஒன்றில் பணிபுரியும் Mr.ஜென் தன்
வசனங்களுக்காக கந்தவ வனத்தில் தவமிருந்து
ஐயாயிரம் பக்கங்கள் அடங்கிய ஓர் இதிகாசத்தை
எழுதுகிறார் .பிறகு தன் பேனாவின் அளவை வைத்து
எழுதுபவர்கள் அனைவரின் உயரத்தையும் அளக்கத்
துவங்குகிறார்.அப்பொழுது அதே வனத்தில் Kurt
Cobain இசை பிண்ணனியில் ஒலிக்க இளம் பெண்
ஒருத்தியுடன் சல்லாபித்துக்கொண்டிருந்த சின்ன
சங்கரன் அவரை கண்டவுடன் மரியாதையுடன்
எழுந்து நிற்கிறான்.அவனுக்கு அவர் அளித்த
போதனையே இங்கே கதையாக படிக்கும்படி உங்கள்
தலையெழுத்தாகிவிட்டது. இதில் இன்னொரு
சுவாரஸ்யமான விஷயம் சின்ன சங்கரனின்
கதைகளை Mr.ஜென் பீ என்று. சொல்லியிருக்கிறார்.
அருளாசி 1:
இந்த இடத்தில் இதை இப்படி துவங்கக்கூடாது.
வேறெப்படி துவங்குவது Mr.ஜென். “கானகம் தனது
இறக்கைகளை சுருக்கி காரிருளை அடைகாத்தபடி
மூடிக்கிடந்தது “இப்படி .
நீ புராணங்களை படிக்கவில்லையா ! அவற்றை
என்னவென்று நினைத்துவிட்டாய். அவை
இம்மண்ணின் சொத்து, பத்து ,முத்து பித்து. த்து நீ ஓர்
ஆத்திகன்,ஓர் இடது சாரி ,சீன ஆதரவாளன், காவி
எதிர்ப்பாளரன்,கலகக்காரன். Mr.ஜென் , நீங்கள் ஏன்
ஓலைப்பாயில் மாமியின் பழைய புடவையை விரித்து
அதில் வத்தல் பிழிவதைப்போல எழுதவேண்டும்
என்கிறீர்கள்.உங்களைத்தவிர எவன் என்ன
எழுதினாலும் அது மயிர் தானே ! No..No..No…
உடனே இந்நாட்டிற்கென்று உள்ள மரபை நான்
காயடிப்பதாக கிளப்பி விடுவீர்கள். தமிழ்
பெருங்குடிகளுக்கும் உங்களை விட்டால்
வேறெவரும் Serious இலக்கியம் எழுதுபவனில்லை .
ஆமாம் ஐயனே ஒருவர் உயிரை விட்டு என்ன
எழுதினாலும் அதெல்லாம் உங்களுக்கு
ஜனரஞ்சகமானது. ஒருவர் லத்தின் அமெரிக்க
இலக்கியம், அரேபிய இலக்கியம், இசை ,உடல்
துய்ப்பு, Trangressive , Non-Linear,மனச்சிதைவு,
தமிழின் ஆகச் சிறந்த ஆளுமைகள் என்று இளமை
புதுமை அதகளத்தோடு பல ஆண்டுகளாக
எழுதிவருகிறார் அவரை ஒரேயடியாக மட்டையடி
அடித்து Pulp வகை எழுத்தாளனென்று ஒதுக்கி
வைப்பீர்கள். யோவ் ..அவர் எழுதும் அனைத்தும்
உலக இலக்கியம். ஆம் உண்மைதான் அவர் Kurt
Cobain, Paulo Coelho கலந்த கலவை. ஆனால்
இதெல்லாம் இங்கு பேச வேண்டிய அவசியமில்லை.
நீ கதை தானே எழுத வேண்டும் உனக்கு எதற்கு
வேண்டாத வேலை. ஆம் சமகாலத்தில் கதை வெறும்
கதை . விஷ கக்கல் அதிலும் மிக நேர்த்தியான
முறையில் செய்ய வேண்டும். வாணலியை எடுத்து
அடுப்பில் போடவும் பிறகு சூடேறியதும் அதில்
எண்ணெய் ஊற்றவும்.வெங்காயம், தக்காளி, பூண்டு
ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வறுத்து
எடுக்கவும். இப்படியாக Mr.ஜென். எழுதத்
துவங்குவார். உன் கதை எங்கே ? கவுட்டியில்
இருக்கிறது. என்னைவிட பார்வதி அம்மா
நன்றாகவே கதை சொல்வாள். பேரழகி அவள்.
எல்லாரும் இப்படி சொல்லி “பேரழகி” என்பதற்கு
அர்த்தமில்லாமல் போய்விட்டது. உங்களுக்கு
தங்கம்மா தெரியுமா? பார்வதி அம்மா, தங்கம்மா
,வனஜா அம்மா எல்லாரும் ஒண்ணுதான். அப்போது
ஒரு பிரபல நடிகை “தொடை அழகி” அவள்
தொடையை இன்சூரன்ஸ் செய்து வைத்துள்ளதாக
என் வகுப்பில் இருந்த சுப்ரமணிதான் சொன்னான்.
ஆனால் அவள் தொடையெல்லாம் பார்வதி
அம்மாவின் தொடையிடம் பிச்சை வாங்க வேண்டும்.
அது சரி அவள் எப்படி அந்த சொட்டை தரகனை
கல்யாணம் செய்துகொண்டாள் ! உனக்கு
இப்பொழுது அவன் எப்படி அவளை செய்வானென்று
கற்பனை ஓடும். உண்மைதான் அவன் அவளுக்கு
எந்த குறையுமில்லாமல் மூன்று பிள்ளைகளை
கொடுத்துதான் இருந்தான். ஆனாலும் உடல்
வலியது.போகம்! போகம் ! போகும் போகும் போகும்
ச்சிகு புகு ச்சிகு புகு ச்சிகு புகு. இதுதான் கதையா.
எனக்கென்னவோ Mr.ஜென் மட்டுமே பிறக்கும்
போதே பேனாவுடன் பிறந்த மாதிரி தோன்றுகிறது .
அவருடைய கதைகளை அடுக்கிவைத்தால் அதற்கு
முன்பாக நீங்களெல்லாம் கொசு. கடோத்கஜன் ஏன்
இந்த இடத்தில் அநாவசியமாக சிரிக்கிறான். தம்பி நீ
அவருடைய பயிற்சி பட்டறைக்கு போ உன்னை தேய்
தேய் என்று தேய்த்து கூழாங்கல்லாக்கிவிடுவார். நீ
ஏன் பார்வதி அம்மாவின் தொடையிலிருந்து
Mr.ஜென் மீது பாய்கிறாய். வருங்காலத்தில்
Mr.ஜென்னிஸம் உருவாகும் இந்தியா முழுக்க ஒரு
நவீன வேதாந்த மரபின் நவீன எழுத்தாளனை
கொண்டாடப்போகிறார்கள். இது அரசியல் நாவலா
குமார். நிச்சயமாக இல்லாமல் இல்லை. என்ன
Mr.ஜென் உங்களைப்போல் எழுதுகிறான் இந்த
அயோக்கிய திராவிடன்.நிற்க.,நீங்கள் ஒரு
பெண்ணின் அடி மனதில் சுழன்றடித்த காமத்தை
வெறுமனே ஒரு ஆணால் நிறைவேற்ற இயலுமென்று
நம்புகிறீர்களா! மனிதன் இயற்கையிலேயே பல
புணர்ச்சி விரும்பிதானே ! அப்படியானால் உன்
மனைவியை ஊர் மேய விடு. இங்கே எதை
சொன்னாலும் உயிருக்கு ஆபத்து. பேசாமல் நீயும்
நானும் இங்கேயே தங்கிவிடுவதே நல்லது. மருத்துவர்
வந்துவிடுவார் நமக்கென்று ஓர் அறை ! நீ நிச்சயமாக
அந்தப்புர பெண்களின் கதையை கேட்க
விரும்புகிறாயா? முதல் முறை மட்டுமே படுத்து
புரண்டு விட்டு சென்ற அரசனின் அடுத்த
வருகைக்காக காத்திருந்து தவித்து தத்தளித்து
தாபத்தில் நெக்குருகி இருந்தவள்
உப்பரிகையிலிருந்து குதிரையை குளிப்பாட்டும்
சேவகனை பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள்
பூப்பெய்திய அடுத்த மாதமே அரசருக்கென்று
அனுப்பப்பட்டவள். அறியாத வயசிலேயே
படக்கென்று எல்லாவற்றையும் முடித்துவிட்டு
போய்விட்டான் அரசன். இவள்தான் அந்தப்புரத்தில்
இருக்கும் அத்தனை பேரிலும் இளையவள். அவள்
அப்பா பேரரசுக்கு கப்பம் கட்டும் சிற்றரசன். அவனும்
என்ன செய்வான் ? பக்கத்துவீட்டு எதிர்த்தவீட்டு
ஆண்களால் அல்லது குடிபோதை தலைக்கேறி
வெறிபிடித்த ஆண்களால் அல்லது தொடையை
முலைகளுக்கு இடைப்பட்ட பகுதியை பார்த்து
பார்த்து சலித்துப்போன ஆண்களால் கலாச்சாரத்தை
காப்பாற்ற ஜீன்ஸ் அணியும் பெண்களின்
யோனிகளில் நீண்ட இரும்பு குழாயை சொருகும்
ஆண்களால் அல்லது யோகம் தவம் பயிற்றுவிக்கும்
சாமியார்களால் ஆமென் சொல்லித்தேற்றும்
பாதிரியார்களால் வண்புணர்வு செய்யப்பட எல்லா
வாய்ப்புகளும் இருக்கும் ஒரு தேசத்தில் அவன் தன்
மகளை மிகச்சிறிய வயதில் அரசனுக்கு தாரை
வார்த்ததில் நியாயமில்லாமலுமில்லை.நீ காலத்தை
போட்டு ஏன் இப்படி குழப்புகிறாய் ! காலம் ஒரு
பெரிய பைத்தியக்காரத்தனம் ..என்னைவிட
ஐன்ஸ்டீன் மிகவும் விளக்கமாக சொல்வார். காலமும்
இருப்பு என்ற வெளியும் ஒன்றுடன் ஒன்று
ஊடுபாவியது .இன்று இதை கேட்கும் நீ பதிலை
பெறும்போது இருக்கும் நீ அல்ல.கிழட்டு
முண்டம்.நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு
அலைகிறது. வாய் பேச முடியாத சிறுமியை
பதினைந்து பேர் என்னவெல்லாம் செய்தார்கள் !
நீயும் தான் Pornography பார்க்கிறாய். பெண்களைப்
பார்த்தால் உனக்கு என்னவெல்லாமோ செய்கிறது.
உனக்கு தி.ஜாவைத் தெரியுமா! தி.ஜா “தவம்” என்று
ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார் அதில் செல்லூர்
சொர்ணாம்பாவுக்காக கோவிந்தவன்னி இருபது
வருடம் கழித்து அவளைத்தேடி போவான். அவனும்
நானும் ஒன்று தான்.நீ வேண்டுமென்றால்
ஜானகிராமனிடமே போய் கேட்டுப்பார். இது எந்த
ஜானகிராமன்! இப்படியெல்லாம் எழுதினால்
உன்னை அரைக்கிறுக்கன் என்று முத்திரை
குத்திவிடுவார்கள். Mr.ஜென் நான் ஒரு முழு கிறுக்கு.
நீங்கள் ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள் போய்
இதிகாசத்தை விட்ட இடத்திலிருந்து துவங்குங்கள்.
அஸ்தினாபுரம் அழைக்கிறது. நீ கடைசிவரை கதை
சொல்லப்போவதில்லையா ? எல்லாம் கதைப்படி
தான் நடக்கிறதா ! நேற்று இரவு முழுக்க மழை.
வேண்டுமானால் யானையின் தோலை உரித்த
மீன்கொத்திப் பறவையின் கதையை சொல்லவா! மீதி
என்ன சொன்னாலும் அது பெண்கள்
சம்பந்தப்பட்டதாகவே இருக்கும். நானும் ஒரு
பெண்தானே ! என்னை ஏன் இப்படி பாராட்டி
சீராட்டி முத்தமிட்டு தித்தித்து திணறடித்து முடிவில்
நடுத்தெருவில் அம்போவென விட்டு விட்டு
போனீர்கள். ரஞ்சித் எவ்வளவு அழகாக திட்டம்
போட்டு அபியை உன்னிடமிருந்து
அழைத்துக்கொண்டு போய்விட்டான். இரண்டு
பிள்ளைகளையும் வேண்டாமென்று சொல்லிவிட்டு
பானிபூரி விற்ற வடநாட்டு காரனுடன் முருகானந்தின்
அம்மா ஓடிப்போக வில்லையா. ஆணும்
பெண்ணுமாக வாழ்வதென்பது கயிற்றின் மேல்
நடக்கும் வித்தையாகிவிட்டது. நடுத்தம்பியின்
மனைவி அவனை தினம் கெட்ட கெட்ட
வார்த்தைகளால் திட்டுகிறாளாம். ஒரு நாள்
நண்பர்களுடன் சேர்ந்து கொஞ்சம் அதிகமாக
குடித்துவிட்டு வந்திருக்கிறார் அன்று துடைப்பத்தால்
அடித்திருக்கிறாள்.அவன் ஓர் பூச்சியைப்போல்
அவளுடன் வாழ்ந்துக்கொண்டிருக்கிறான்.
விவாகரத்தா ! அதையெல்லாம் நினைத்துக்கூட
பார்க்க முடியாது. அது மிகவும் costly and complicated
விஷயம். ஒரு நாள் விடியற்காலை நான்கு மணிக்கு
எழுந்து Vivaldi ஐ கேட்டுக்கொண்டிருந்தவனை
“என்னா மயிருக்கு நீ இப்ப எந்திரிச்சு உட்காந்துருக்க
“நான் தூங்க வேணாம்.பொழுதனைக்கும் இதே எளவு
மயிரா இருக்கு காலையில காலையில எந்திரிச்சு
உட்காந்துக்குர” என்று கத்தியிருக்கிறாள்.
இத்தனைக்கும் அவன் over ear phone ல்தான்
கேட்டுக்கொண்டிருந்தானாம். அப்புறம் எப்படி
அவளிடம் படுத்து பிள்ளைகள் கொடுத்தான் என்று
கேட்டதற்கு. ஹி ஹி ஹி என்று சிரித்தான் .அதிலும்
அவள் சொல்கிறப்படிதான் செய்யவேண்டுமாம்.
இதெல்லாம் பெண் அடக்குமுறை இல்லையா
தோழர்களே! உங்கள் புரட்சி பட்டியல்களில்
இதெல்லாம் சேராதா ! ச்சீ நாயே நீயும் அந்த திராவிட
எதிரியுடன் சேர்ந்து பெண்ணிய எதிரியாக
மாறிவிட்டாய்.இனி உனக்கு காயடிக்க
வேண்டியதுதான்.பல ஆண்டுகளாக வெறுமனே
கையடிக்க மட்டுமே முடிந்தவனை காயடித்தால்
உங்களுக்கு தான் அவமானம் அரசே! அடப்பாவி
புளுகு மூட்டை உனக்கு பெண் போகமென்றால்
எனவென்றே தெரியாதா ! சாமி சத்தியமா சொல்றேன்
(இயேசு சாமி - அவன் ஒரு நல்ல மேய்ப்பனிடம்
மேயும் ஆடு) இதுவரை கை மட்டுமே துணை.
இன்றும் நம் புண்ணிய தேசத்தில் குடும்ப பாரம்
சுமக்கும் நடுத்தர வர்க்க இளைஞர்களில்
முக்கால்வாசிப்பேர் பெண் மோகம் என்றால்
என்னவென்றே தெரியாமல் இருக்கிறார்கள். ஆனால்
இதிலும் *சாதி முக்கிய பங்கு வகிக்கிறது.
“கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே”
ஒருத்தன் ஒரு புண்ணாக்கு சந்திப்பில் உன்னிடம்
கேட்டானே “பாபு யமுனாவோடு படுக்கிறான்
,தங்கம்மா மாடிப்படி ஏறி வந்து பாபுவிடம் தன்னை
செய்யும்படி கெஞ்சுகிறாள் “ இதெல்லாம் என்னய்யா
கதை இதனால் சமூகத்திற்கு எதாவது பிரயோஜனம்
இருக்கிறதா ? இப்படிப்பட்ட எழுத்துக்களால்தான்
தேசத்தில் புரட்சி வருவது தாமதப்படுகிறது.
இல்லையென்றால் இந்நேரம் எல்லாரும் சமமென்ற
உன்னத தத்துவம் அரியணை ஏறி எல்லாருக்கும்
எல்லாம் கிடைத்திருக்கும். உண்மைதான் அரசே !
உங்களுக்கு உடல் பற்றி எவனும் பேசக்கூடாது.
ஆனால் கோடானு கோடி அணுக்கள் முட்டி மோதிய
சிதறல்களில் உள்ளுறைந்த ஆற்றலை குடித்து குடித்து
வளர்ந்த இனச்செல்களில் அப்படியெல்லாம்
இல்லையே. அவை பேரண்டத்தின் அனைத்து
ஜீவராசிகளையும் அன்பால் கரைக்கச் சொல்கின்றன
அவற்றை அப்படியே விழுங்கச்சொல்கின்றன.
நீங்கள் அதற்கு ஆயிரம் சடங்குகள் செய்து உங்கள்
அரைஞாண் கயிற்றில் கட்டி இழுத்துச் செல்ல
நினைக்கிறீர்கள். மணி என்று ஒரு நண்பண்
இருந்தான் அவனுக்கு இரண்டு தங்கைகள். ஒருத்தி
தலித் பையன் ஒருவனை காதல் திருமணம் செய்து
கொண்டாள். அதற்கு மணி கூட எதும்
செய்யவில்லை. ஆனால் அவன் மச்சான் அதாவது
இன்னொரு தங்கையின் கணவன் என்ன செய்தான்
தெரியுமா ? தன் மனைவி மீது மண்ணெண்ணெய்
ஊற்றி கொளுத்தி விட்டான். உன் கொழுந்தியாள்
தலித் பையனோடு ஓடிவிட்டாள் என்று ஊர் முழுக்க
பேசினார்களாம் அதற்காக. இப்படி கலாச்சாரம்
காத்து பண்பாடு போற்றி நடு ரோட்டில் காதல்
திருமணம் செய்தவர்களை வெட்டிக்கொள்ளும்
நீங்கள் எனக்கு என்ன அறிவுரை வழங்குவீர்கள்
Mr.ஜென். உங்களுக்கு அறிவு இருக்கிறது என்பதை
நிரூபிக்க ஒன்று அடுத்தவனை முட்டாளாக்க
வேண்டும் அல்லது அவனுக்கு அறிவுரைகள் வழங்கி
சாகடிக்க வேண்டும். நேரம் கடந்துவிட்டது இனி
எத்தனை காலம் நீ வந்து போனவர்களின்
கதையையே சொல்லிக்கொண்டிருப்பாய்.இனி ஆண்
பெண் உறவென்பது கம்பி மேல் நடக்கும் வித்தை.
எத்தனையோ குட்மார்னிங் குறுஞ்செய்திகள் ,
புஜ்ஜூ பூனையென்று கொஞ்சல்கள் கணவனுக்கு
அருகிலிருந்தே அடுத்தவனுக்கு அனுப்பும்
மனைவிகளும் மனைவிக்கு அருகிலிருந்தே
அடுத்தவனுக்கு அனுப்பும் கணவர்களுமாக
மாறிவிட்டது. இதெல்லாம் வெறுமனே கள்ள உறவா
Mr.ஜென். உளவியல் ரீதியாக உங்களிடம்
வேறெதாவது பதில் இருக்கிறதா. ஓகோ எல்லாரும்
psychopath ஆ. சிவ சிவ….இன்று பிரதோஷம்
பஞ்சவாத்ய கோஷ்டி கிளம்பி விட்டது. நானும்
போகிறேன் விரதமிருந்து ஒன்றை அடைவது
சுவாரஸ்யமானது. நான் போகும் நேரம்
வந்துவிட்டது. யாராவது வந்து இந்த இடத்தை
நிரப்பிக் கொள்ளலாம். ஜென்னிஸம் -உளவியல் –
உரையாடல் இப்படி போட்டுக்கொண்டு
ஆரம்பியுங்கள். நேக்கு வயித்த முட்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக