கு.ப.ரா எனும் மாயோன் 1 புராணக் கதைகளில் வரும் மாயோனுக்கு வேறெவரையும் விட பெண்களைப் பற்றி நன்றாகவே தெரியும். அவன் அவர்களுடனே இருக்கிறான் அவர்களாகவே இருக்கிறான். அவர்களின் சிரிப்பையும் அழுகையையும் ஆழமாக உணர்ந்தவன் அவன். அதையே தனது சிருஷ்டியின் ஆதாரமாக கொண்டு ஆண்களுக்குள்ளும் அந்த அபலைப் பெண்களின் ஏக்கங்களை, பெருமூச்சுகளை, வலிகளை உணரும் கடிகார முட்களின் மென்னொலியை அவர்களுடைய இதயத்திற்குள் கேட்கும்படி செய்கிறான். உண்மையில் அவனே அந்தப் பெண்களின் தாகம்,ஏக்கம்,அனைத்துமாக இருக்கிறான். அவனே ஆண்களை மயக்கும் மோகினியாகவும் வலம் வருபவனாகி "தன்னில் தன்னைக் கண்டு தானே மயங்குபவன்". மாயோனின் இத்தனை இரகசியங்களையும் ஒரு சேர இணைத்து மாயோனாகவே புனைவின் தளத்தில் இறங்கி ஒரு சிறுகதை வடிவத்திற்குள்ளாக அதன் அனைத்து நுட்பங்களையும் ஒருவரால் செய்துக்காட்ட முடியுமென்று நம்புவதற்கு சிரமமாக இருந்தால் இதற்கு முன்பாக நீங்கள் கு.ப.ரா வை முழுமையாக வாசிக்கவில்லை என்றே அர்த்தம். பொதுவாகவே தமிழ் சூழலில் வாசிப்பு மிகக் குறைவு எனும் பொழுது அதில் குறிப்பிட்டு கு.ப.ரா மட்டுமென்ன விதிவிலக்கா! சாபம் சாபம் தான் அதில்
கொடியில் காயும் நதி தட்டையான உலகமல்ல.தட்டையான உயிரிகள் மேய்ந்து திரியும் இடம் அதுவல்ல காலம்,வெளி புணரும் ஒரு மேலோடு. அங்கே குதிரைகள் தங்கள் வண்ண வால்களை அசைத்தபடி மேய்கின்றன. என் காகிதங்களில் ஒட்டுகின்றன அவற்றின் குளம்புகளின் ஓசை . நான் வெறும் கவிஞன் இசை ஞானி அல்ல. நீ வேறொரு உடலோடு வா வேறொரு நாளில் நாம் இந்த பிரபஞ்ச வெளியில் ஒளியாக நீந்தி உயிர்த்தரிப்போம். நான் இப்போது வெறுமனே இலையில் முறியும் பச்சையம். வெயில் குடிக்கும் வெறும் நதி. முப்பரிமாண சதைகளை பிடித்து விளையாடும் ஆலிலை கிருஷ்ணன் அறிவான் எனக்கு ஆயிரம் நாமங்கள் எதற்கென்று . நீ என்னை எந்த பெயரிலும் அழைக்கலாம் எவரும் உயிர்தெழப் போவதில்லை அதைக் கேட்டு. இரவை உலர்த்தி கொடியில் போடு. நிகழ்பவை எல்லாம் அதிசயம்தான்.
இருள் மேவிய இறகு யாமத்தில் கனவுகளை துளைத்து எழுந்த வல்லூறு குஞ்சு ஒன்று பகலின் குமிழியில் தள்ளாடி தள்ளாடி குறுகி சுருண்டு கிடந்தது அதன் உடல் பிள்ளைப் பேறு பார்த்துவிட்டு பிரசவ அறையிலிருந்து வெளியே வரும் மருத்துவச்சியின் கைகளை ஒத்திருந்தது தற்செயல் நிகழ்வல்ல அகாலத்தில் அடிக்கடி விழிக்கும் அதன் நகங்களில் சதை துணுக்குகள் இன்னும் ஒட்டியிருக்கின்றன இரயில்வண்டி பெட்டிகள் குகையில் நுழைந்து வெளியேறுவது போல அந்த வல்லூறுவின் திறந்த இடதுகண்ணில் நுழைந்து வெளியேறும் எறும்புகளுக்கு ஒருவேளை புரியலாம் இடம்பெயரும் இருளின் அடர்த்தி
கருத்துகள்
கருத்துரையிடுக