நான்


என் இறுதிநாள் வரும்பொழுது

ஒருவரும் எனக்காக அழப்போவதில்லை

நீயும் கூட

சிந்தப்படும் கண்ணீரைப் பற்றியும் எந்தக் கவலையுமில்லை !

 

நான் ஒரு வன மிருகம்

மந்தையிலிருந்து வெளியேற்றப்பட்டவன்

 

துப்பாக்கி ரவைகள் என் தோலைத் துளைக்கலாம்

ஆனால் நான் தொடர்ந்து என் வேலையைச் செய்வேன்

 

என் காயங்களையும் வலிகளையும் எடுத்துக்கொண்டு முன்னேறிச் செல்கிறேன்

தாக்குகிறேன்

தாக்குகிறேன்

துயரங்கள் மறையும் வரை

 

நான் இனி எதைப்பற்றியும் கவலைப்பட போவதில்லை

 

நான் இன்னொரு ஆயிரம் ஆண்டுகள் வாழவே விரும்புகிறேன்

 

 

“ME” BY CHIRIL ANWAR

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கு.ப.ரா எனும் மாயோன்