வேண்டாம் பெண்ணே !
வேண்டாம் பெண்ணே!
என்னில் எது உயிர்த்திருக்கிறதோ அது
இன்னும் எளிதாக உன்னுடைய அதீத உணர்ச்சிவயப்பட்ட கிளர்ச்சியற்ற
தழுவலை விலக்கிச்செல்கிறது
வேறொரு கடலின் பசுமையை கண்டறிவதையே உள்நோக்கமாக கொண்டிருக்கிறது
நாம் முதன் முதலாக சந்திந்த கப்பலுக்கே திரும்பிச்
சென்று
கப்பலின் சுக்கானை காற்றிடம் ஒப்படைக்கிறது
காத்திருக்கும் நட்சத்திரங்களின் மீது நம் கண்கள்
நிலை குத்தியிருக்கின்றன
எதுவோவொன்று தன் சிறகுகளை படபடவென்று அடித்துக்கொண்டு
மீண்டும் தெரிவிக்கிறது தாய்-போ மற்றும் ஆம்போனீஸ்
கடலின் இரகசியங்களை.
இதுதான் பெண்ணே !
அனைத்து வகையிலும் என்னால் எழுத முடிந்த தெளிவில்லாத
ஒரு வரி
என்னுடைய விமானத்தில் மர்மமான அவளுடைய புன்னகையை நோக்கி
செல்லும்போது
(Ambonese- இந்தோனேசிய தீவு , TAI PO- ஹாங்காங் பகுதி நகரம்)
“NO WOMAN” BY CHIRIL ANWAR
கருத்துகள்
கருத்துரையிடுக