சம்மதம்
நீ விரும்பினால் உன்னை மீண்டும் அள்ளி எடுத்து
என் இதயம்
முழுமைக்குமாக நிரப்பிக்கொள்வேன்
நான்
இப்பொழுதும் தன்னந்தனியாகவேயிருக்கிறேன்
எனக்குத்
தெரியும் இப்பொழுது இருக்கும் நீ முன்பிருந்த நீ அல்ல
ஒரு மலரைப் போல்
பகுதி பகுதியாக பிய்த்து எடுக்கப்பட்டாகிவிட்டது.
தவழ்ந்து செல்லாதே ! தைரியமாக என்னை உற்றுப்பார்
நீ விரும்பினால் உன்னை மீண்டும் அள்ளி எடுத்துக்கொள்வேன்
எனக்காக மட்டும்
ஆனால்
நான் ஒரு போதும்
முகம்பார்க்கும் கண்ணாடியுடன் கூட அதை பகிரமாட்டேன்
(Wiilingness by CHIRIL
ANWAR)
கருத்துகள்
கருத்துரையிடுக