என் நண்பனும் நானும்

 


நாங்கள் ஒரே பாதையை பகிர்ந்துக்கொண்டோம்

காலம் தாழ்த்திய இரவில்

பனி ஊடுருவ

மழை எங்கள் உடலை நனைத்தது

 

கப்பல்கள் உறைந்து நிற்கின்றன

துறைமுகத்தில்

 

என் இரத்தம் புளித்துவிட்டது. மனம் இறுகிவிட்டது.

 

அதை பேசுவது யார்?

என் நண்பன் ஆனால் ஒரு எலும்பு கூடு

அவனது உறுதியை அழைக்கழிக்கிறது  

 

அவன் நேரம் என்னவென்று கேட்கிறான்!

 

மிகவும் தாமதமாகிவிட்டது

அனைத்து அர்த்தங்களும்  மூழ்கி அமிழ்ந்துவிட்டது

மேலும் இங்கே

இயக்கம் என்பது எவ்வித செயல்நோக்கமும் கொண்டிருக்கவில்லை

 

“MY FRIEND AND I” BY CHIRIL ANWAR

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கு.ப.ரா எனும் மாயோன்