அறிவிக்கை
கட்டளையிடுவது என் உள்நோக்கமல்ல
தலைவிதியென்பது பிரிதொரு தனிமைதான்.
மற்ற அனைவர்களுக்கும் மத்தியிலிருந்தே நான் உன்னை
தேர்வுசெய்தேன்
ஆனால் ஒரு கணத்தில் மீண்டும் ஒரு முறை நாம் தனிமையின்
வலையில் சிக்கிகொண்டோம்.
நான் உன்னை உண்மையாகவே விரும்பிய தருணம் இருந்தது
கோலாச்சும் இருளில் குழந்தைகளாக இருப்பதற்கு,
மேலும் நாம் முத்தமிட்டுக்கொண்டோம் ,தழுவிக்கொண்டோம்,
சோர்ந்துபோகவில்லை.
நான் ஒருபோதும்
நீ என்னை விட்டுச் செல்ல விரும்பவில்லை
உன்னுடைய வாழ்வை என்னுடன் பிணைத்துவிடாதே
அதற்காக நான்
மிக நீண்ட காலம் யாருடனும் இருக்க முடியாது.
நான் இப்பொழுது
பெயரில்லாத ஏதோ ஒரு கடலில் இருக்கும்
ஒரு கப்பலின் மீது இருக்கிறேன்.
(Announcement by CHIRIL ANWAR)
கருத்துகள்
கருத்துரையிடுக