வியர்வை 

 




ஒவ்வொரு நாளும்

என் தந்தை தனது வியர்வைத் துளிகளை

ஒரு கண்ணாடி குப்பியில் சேகரித்தார்

பிறகு

அவற்றை குளிர்சாதனப் பெட்டியில் பதுக்கிவைத்தார்

காய்ச்சல் வந்து

என் உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது

குளிர்ந்த தனது வியர்வைத் துளிகளை

ஒரு கண்ணாடி கோப்பையில் ஊற்றி எனக்காக அருந்தக் கொடுப்பார்

மடக்.. மடக்…காய்ச்சல் பறந்தோடிவிட்டது

(SWEAT BY Joko Pinurbo)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கு.ப.ரா எனும் மாயோன்