தொலைதூரத்து பைன் மரங்கள்

 


தொலைவில் பைன் மரங்கள் அங்குமிங்கும் அசைகின்றன

பகல் பொழுது இரவாகிக்கொண்டிருக்கும் போது

கிளைகள் சன்னல் கதவின் மீது வழுவற்று மோதுகின்றன

அவை

உணர்ச்சிகளை கிளர்த்தும் காற்றால் தள்ளப்படுகின்றன

 

இப்பொழுது உயிர்பிழைக்க முடிந்த ஒரு மனிதன் நான்

வெகு காலத்திற்கு முன்பாகவே நான் என் பால்யத்தை விட்டு விலகியிருந்தேன்

முன்பொரு முறை எதுவோ ஒன்று அதில் இருந்திருந்தாலும்

இப்பொழுது அதனால் எந்த ஒரு பிரயோஜனமுமில்லை

 

இதுதான் வாழ்வு ஆனால்

அது

தோல்வியை தள்ளிப்போடுவது

இளமையினுடைய கட்டுபாடற்ற காதலிலிருந்து உருவாகி தழைத்த ”அந்நியமாதல்

கடைசியாக நாம் எதிர்ப்பின்றி உடன்படுவதற்கு முன்பாக

எப்பொழுதும் அங்கே வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத எதுவோவொன்று இருக்குமென்ற ”அறிதல்”

 

 

(Pines in the distance by CHIRIL ANWAR)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கு.ப.ரா எனும் மாயோன்