கவிதை இரசிகன்


குழந்தைகளுக்கு கவிதைகள் புரியாது 

அவர்கள் கவிதை புத்தகங்களையும் கவிதைகளையும் அவசரக்குடுக்கையான ஒரு விமர்சகனைவிட  மிக வெளிப்படையாக மிக நேர்மையான முறையில் கிழித்துவிடுகின்றார்கள்


புத்தகங்களில் பாதியும் 

கிழிந்த காகிதங்களில் மீதியுமாக 

குழந்தைகள் கவிதைகளையும் கவிதைப் புத்தகங்களையும்

தரையில் 

 நவீன ஓவியமாக வரைந்துவிடுகிறார்கள்


அவர்களுக்கு 

வேண்டியிருப்பதெல்லாம் 

காகிதங்களை கிழிக்கும் சுவாரசியம் மட்டுமே  

நாம்தான் எல்லாவற்றிலும் 

எதையாவது ஒன்றை தேடிக்கொண்டே இருக்கிறோம் 


ஒரு குழந்தை சட்டென 

புத்தகம் ஒன்றின் பக்கத்தை கிழித்து சிரிக்கும் 

கணநேர இரசனையோடு 

நம்மால் ஒரு கவிதையை வாசிக்க முடிவதில்லை


குழந்தைகளின் கையிலிருக்கும் புத்தகங்களை வெடுக்கென்று பிடுங்குவதைப்போலதான்

எல்லாவற்றையும் 

பிடுங்கி

அவசரம் அவசரமாக 

நமக்குள் இருக்கும் அலமாரிகளில் திணித்துக்கொள்கிறோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கு.ப.ரா எனும் மாயோன்