காத்திரு


நீ இந்த இடத்தில் வெறும் ஒரு வாசனையாகவாவது இரு

அல்லது ஒரு பழைய கைக்குட்டையாய்

அல்லது

ஒரு சானிட்டரி நாப்கினாய்

அல்லது 

வீட்டின் ஒரு ஓரத்தில் இருக்கும் குப்பைத் தொட்டியாகவாவது

எப்படியாயினும்

ஒரு தற்கொலை நிகழும் வரை

உற்றுப்பார்த்திருக்கும் 

மின் விசிறியின் கண்களுடன் 

எனக்காக காத்திரு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கு.ப.ரா எனும் மாயோன்