சிலுவையில் கணத்து எரியும் வாதையின் வேர்கள்

முதுகெலும்பின் வழியாக உடலெங்கும் பரவ

தீர்க்கதரிசியாய் இருப்பதன் வேதனை

இரத்த சுடராய் கண்களில் 


நல்லவன்

என்ற வெறும் சொல்லுக்காக

சின்ன சின்ன தீர்க்கதரிசிகள்

பேருந்தில் சரியாக சில்லரைக் கொடுக்கிறார்கள்

அங்காடிகளில் கால் கடுக்க வரிசையில் நிற்கிறார்கள்

தேர்தல்களில் தவறாமல் வாக்களிக்கிறார்கள்

நல்ல காதலனாய்

நல்ல கணவனாய்

நல்ல நண்பனாய் வாழ்ந்து முடிவில்

யாருமறியாமல் செத்தும் போகிறார்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கு.ப.ரா எனும் மாயோன்