ஆண்டாள்
நிலமெங்கும் பூக்கள் விசிறி கிடக்க
உடலில் துளிர்க்கும் நீரின் தளிர்கள் நிறைந்த
சின்னஞ்சிறு செடிகள்
மஞ்சள் பூசிய பகல்
சன்னல் வழி
எதிர்படும் எதிர்பாராத பறவையின் வருகையாக
நீ
கைகளில் உறைந்த குளிர்ச்சியோடு
நேசத்தின் பூட்டிய தாழினுள்
இன்னும் உறங்குமால்
எழுந்திரு எம்பாவாய்
உன் காதலன்
புலனத்தில் நீ அனுப்பும் குறுஞ்செய்திக்காக
காத்திருக்கிறான்
கருத்துகள்
கருத்துரையிடுக