இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
  நிழல்கள் மிகவும் தாமதமாகிவிட்டது சாலைகளில் பல்லியைப்போல இரவு  மனிதர்களின் அரவமற்ற வேளையில் மரங்கள் சல்லாபிக்கத்துவங்கிவிட்டன கூச்சத்துடன்  நடக்கிறேன்  காற்றில் விரவுகிறது உதிர்ந்த இலைகளின்  நமுத்த ஈர வாசம் இந்நேரம் வீடுகளில் அடுப்புகளும்  அஞ்சரைப்பெட்டி சாமான்களும் கூட கிசுகிசுத்து அடங்கியிருக்கும் இவ்வேளையில் இருட்டுக்கு இடைஞ்சலின்றி வாலை சுருட்டும் நாயைப்போல என் நிழலை  சுருட்டிக்கொண்டு  உன்னுடன் வர முடிந்தால் நன்றாகத்தானிருக்கும் ஆனால் நீ எவ்வித தொந்தரவு மில்லாமல் என்னுடன்  இந்நேரத்தில்   மறக்காமல் ஒரு கைக்குட்டையைப் போல் கைப்பையைப்போல கொண்டு வரும்  உனக்கு நெருக்கமான வார்த்தைகளை  ஆகாயத்தில் மெல்ல மெல்ல மேலேறி மிதக்கும்  பட்டத்தைப்போல பறக்க விடுகிறாய் இதோ  கடைசி திருப்பம் அதற்கு இடது புறம் நீ செல்லும் பாதை  தரையில் சிந்தி ஓடும் தண்ணீராக தனக்கான இடத்தில் நாளை முதல் இந்த இடத்தில் வேறொரு நிலவும்  வேறொரு மனிதனும் தங்களுக்குள் பேசியபடி  செல்லக்கூடும்  அவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும்  இரு நிழல்கள் குறுக்கு வெட்டாக ஒன்றின் மீது ஒன்று பாய்ந்து ஊடுருவி விலகிச் சென்றதன் அடையாளம்
படம்
  அநாமதேயன் எல்லையற்ற திரையை விலக்கி எல்லையற்ற உடலில்  ஒருத்தியை அல்லது ஒருவனை மட்டுமே தேடும்  அற்ப வாழ்விற்குதான் ஆயிரம் நாமங்கள் நான் அதில் பொருத்தமற்றவைகளைப் பொறுக்கியெடுத்து  என்னை மட்டுமே எனக்குள் தேடுகிறேன்  நீ எனக்கு நாயென்றே பெயரிடு போதும்  சுகமடைவேன்
படம்
அனாமிகா  இரவில் தனியாக ஒருத்தி தனது நடுங்கும் விரல்களுக்கு நடுவே உடைந்து விழ   ஆயத்தமாகி கொண்டிருக்கும் நடுங்கும் சிகரெட் கங்கோடு   நீல விளக்கொளியில் சிவப்பு வண்ண மேசையின் மீது முழங்கையை ஊன்றியபடி   அமர்ந்திருக்கிறாள் மூன்று நாட்களாக அழுது முன்னூறு முத்தங்களின் புனித உரையாடலை கருச்சிதைவு செய்த வலியை   மறந் ( த் ) து இன்றுதான் மதுவிடுதிக்கு வந்திருக்கிறாள் அவளுடைய வார்த்தைகள் போலவே அவள் மார்பகங்கள் தளர்ந்திருக்கின்றன இதே இடத்திற்கு விம்மி புடைக்கும்   மார்போடு தன்   அழகின் மீது அலைபாயும் கண்களை பூரித்தபடி   எத்தனையோ முறை மெல்லிய மது போதையில் ஆடியிருக்கிறாள் இனி அவளுடன் யாரும் கைகோர்த்து ஆட இயலாது இனி அவளுடன் யாரும் சகஜமாக பேச இயலாது எல்லாவற்றிற்கும் சாட்சியாக இருந்த இவ்வுடலை அவள் யாருமறியாமல்   அலமாரியினுள் தனது பழைய உடைகளுக்கு நடுவே மடித்துவைத்து விட   விரும்புகிறாள் இத்தனைக்கும் அவள் ஓர் உளவியல் மாணவி யாரோ ஒருவரின் துயரத்தை தன் கைப்பைக்குள் பத்திரமாக நிரப்பிவந்து தன் தலையணைக
படம்
கொக்கிப்புழு நேற்றுதான் அந்த பேருந்தை தவறவிட்டேன் இன்றும் யாராவது நான் நேற்று சென்ற அதே மது விடுதிக்கு என்னை அழைத்துச்சென்றால் மீண்டும் அதே பேருந்தை அதே நேரத்தில் தவறவிடுவேன் . உண்மையில் பேருந்தில் சரியான நேரத்தில்   ஏறி வீட்டுக்கோ அறைக்கோ செல்லவிரும்பவில்லை நான் மிக சரியான படிக்கு எனக்கு மது அருந்த வேண்டும் மிக சரியான படிக்கு இசை கேட்க வேண்டும் மிக சரியான படிக்கு கவிதை வாசிக்க வேண்டும் நிகழ்காலத்தில் எனக்காக காத்திருக்கும்   ஒரு காதலியும் என்னால் இன்னொருத்திக்கு பிறந்த ஒரு குழந்தையும் உண்டு அவர்களுக்காக நான் இந்த இடத்திலிருந்து கிளம்ப வேண்டும் நண்பர்களே இப்பனிக்காலத்தில் ஐந்தாவது கோப்பை மதுவை அருந்தும் என் உடல்மீது வெகு காலமாய்   பிசுபிசுக்கும் என் துரதிஷ்ட ஆடைகளை யாராவது வாங்கிக் கொண்டால் நல்லது இத்தனைக்கும் வீடு திரும்ப விரும்பாத எனக்கு என் குழந்தைக்கும் காதலிக்கும் சொல்வதற்கு சுவாரசியமாக   சில கதைகள் இருப்பதும் உண்மை எனவே இன்று ஒருநாள் என்னை யாராவது உங்கள் வாகனங்களில
படம்
  நேசன் ஒற்றைக்காடு ஒற்றை மரம் ஒற்றைக் காற்று ஒற்றுப்பிழை ஒதுங்கியே நிற்கும்   வானம் எல்லாமுமாகி கலந்து நிறைந்த பின்னும் நேசத்திற்காக கையேந்தும் பிச்சைக்கார வாழ்வு
படம்
 அரூப சந்திப்பு முன் கதை சுருக்கம் 1: தமிழ் திரைப்படம் ஒன்றில் பணிபுரியும் Mr.ஜென் தன் வசனங்களுக்காக கந்தவ வனத்தில் தவமிருந்து ஐயாயிரம் பக்கங்கள் அடங்கிய ஓர் இதிகாசத்தை எழுதுகிறார் .பிறகு தன் பேனாவின் அளவை வைத்து எழுதுபவர்கள் அனைவரின் உயரத்தையும் அளக்கத் துவங்குகிறார்.அப்பொழுது அதே வனத்தில் Kurt Cobain இசை பிண்ணனியில் ஒலிக்க இளம் பெண் ஒருத்தியுடன் சல்லாபித்துக்கொண்டிருந்த சின்ன சங்கரன் அவரை கண்டவுடன் மரியாதையுடன் எழுந்து நிற்கிறான்.அவனுக்கு அவர் அளித்த போதனையே இங்கே கதையாக படிக்கும்படி உங்கள் தலையெழுத்தாகிவிட்டது. இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் சின்ன சங்கரனின் கதைகளை Mr.ஜென் பீ என்று. சொல்லியிருக்கிறார். அருளாசி 1: இந்த இடத்தில் இதை இப்படி துவங்கக்கூடாது. வேறெப்படி துவங்குவது Mr.ஜென். “கானகம் தனது இறக்கைகளை சுருக்கி காரிருளை அடைகாத்தபடி மூடிக்கிடந்தது “இப்படி . நீ புராணங்களை படிக்கவில்லையா ! அவற்றை என்னவென்று நினைத்துவிட்டாய். அவை இம்மண்ணின் சொத்து, பத்து ,முத்து பித்து. த்து நீ ஓர் ஆத்திகன்,ஓர் இடது சாரி ,சீன ஆதரவாளன், காவி எதிர்ப்பாளரன்,கலகக்காரன். Mr.ஜென் , நீங்கள் ஏன் ஓலைப்பாயில்
படம்
  பூப்போட்ட   கைக்குட்டை இந்த நிலம் என் கால்களுக்கிடையில் யாரோ விட்டுச்சென்ற பூப்போட்ட கைக்குட்டையைப்போல தனியாக கிடக்கிறது ஒரு காலத்தில் அது மிக அழகான பெண்ணொருத்தியால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் வெவ்வேறு விதமான வாசனை திரவியங்களில் நனைக்கப்பட்டு உலர்த்தப்பட்டிருக்கலாம் அது இன்று கேட்பாரற்று கிடக்கிறது இது நிலமா ? கைக்குட்டையா? அல்லது நானா? என்பதில் உங்களைப் போலவே எனக்கும் குழப்பம்தான் ஒவ்வொருவரும் யாரோ ஒருவர் என்றோ பயன்படுத்தி விட்டு தெரிந்தோ தெரியாமலோ விட்டுச்சென்ற கைக்குட்டைகள் தானே வயதான கைக்குட்டைகள் வயதிற்கு வந்த கைக்குட்டைகள் பால் கொடி மறக்காத கைக்குட்டைகள் பாலினம் மாறிய கைக்குட்டைகள் காதலில் திளைத்த கைக்குட்டைகள் கவிதை எழுதும் கதை எழுதும் கைக்குட்டைகள் ; இவை தனியாக திரிந்து தனியாக கிழிந்து அழிந்துப் போவதற்கு பதிலாக யாரோ ஒருவரின் வீட்டில் இருக்கும் சிறிய அலமாரியின் சிறிய அடுக்கில் ஒரு மூலையிலாவது மடித்து வைக்கப்பட்டிருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்