சிலுவையில் கணத்து எரியும் வாதையின் வேர்கள் முதுகெலும்பின் வழியாக உடலெங்கும் பரவ தீர்க்கதரிசியாய் இருப்பதன் வேதனை இரத்த சுடராய் கண்களில் நல்லவன் என்ற வெறும் சொல்லுக்காக சின்ன சின்ன தீர்க்கதரிசிகள் பேருந்தில் சரியாக சில்லரைக் கொடுக்கிறார்கள் அங்காடிகளில் கால் கடுக்க வரிசையில் நிற்கிறார்கள் தேர்தல்களில் தவறாமல் வாக்களிக்கிறார்கள் நல்ல காதலனாய் நல்ல கணவனாய் நல்ல நண்பனாய் வாழ்ந்து முடிவில் யாருமறியாமல் செத்தும் போகிறார்கள்
இடுகைகள்
நவம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஷூபர்ட்டின் படகு படகு , பறவை .... __6578 நீ கவிதை ... உதடுகள் ..நடமாடும் நிழல்கள் நகுலன் .. விருட்சமாகும் விதை நதியை மீட்டும் காற்று ...,,, மீன்கள் சுமக்கும் கடல் இசைப் பெருகும் உடல் மீட்டு மீட்டு மீட்டு மீட்டு மீட்டு மீளா இசை பெருக மீட்டு கடவுளைப் பார். ஆடைகளற்ற அவரிடம் ஒரு துளி நிர்வாணம் கேள் ஓசைகளற்ற இடத்தில்தான் ஓராயிரம் வெளிச்சம் தெரிகிறது .. இசைக் குடிக்கும் பறவைக்கு திசைகளெல்லாம் விரியும் வானம் துடுப்பாய் மாறும் கடல் ...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கவிதை இரசிகன் குழந்தைகளுக்கு கவிதைகள் புரியாது அவர்கள் கவிதை புத்தகங்களையும் கவிதைகளையும் அவசரக்குடுக்கையான ஒரு விமர்சகனைவிட மிக வெளிப்படையாக மிக நேர்மையான முறையில் கிழித்துவிடுகின்றார்கள் புத்தகங்களில் பாதியும் கிழிந்த காகிதங்களில் மீதியுமாக குழந்தைகள் கவிதைகளையும் கவிதைப் புத்தகங்களையும் தரையில் நவீன ஓவியமாக வரைந்துவிடுகிறார்கள் அவர்களுக்கு வேண்டியிருப்பதெல்லாம் காகிதங்களை கிழிக்கும் சுவாரசியம் மட்டுமே நாம்தான் எல்லாவற்றிலும் எதையாவது ஒன்றை தேடிக்கொண்டே இருக்கிறோம் ஒரு குழந்தை சட்டென புத்தகம் ஒன்றின் பக்கத்தை கிழித்து சிரிக்கும் கணநேர இரசனையோடு நம்மால் ஒரு கவிதையை வாசிக்க முடிவதில்லை குழந்தைகளின் கையிலிருக்கும் புத்தகங்களை வெடுக்கென்று பிடுங்குவதைப்போலதான் எல்லாவற்றையும் பிடுங்கி அவசரம் அவசரமாக நமக்குள் இருக்கும் அலமாரிகளில் திணித்துக்கொள்கிறோம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கொக்கிப்புழு நேற்றுதான் அந்த பேருந்தை தவறவிட்டேன் இன்றும் யாராவது நான் நேற்று சென்ற அதே மது விடுதிக்கு என்னை அழைத்துச்சென்றால் மீண்டும் அதே பேருந்தை அதே நேரத்தில் தவறவிடுவேன் . உண்மையில் பேருந்தில் சரியான நேரத்தில் ஏறி வீட்டுக்கோ அறைக்கோ செல்லவிரும்பவில்லை நான் மிக சரியான படிக்கு எனக்கு மது அருந்த வேண்டும் மிக சரியான படிக்கு இசை கேட்க வேண்டும் மிக சரியான படிக்கு கவிதை வாசிக்க வேண்டும் நிகழ்காலத்தில் எனக்காக காத்திருக்கும் ஒரு காதலியும் என்னால் இன்னொருத்திக்கு பிறந்த ஒரு குழந்தையும் உண்டு அவர்களுக்காக நான் இந்த இடத்திலிருந்து கிளம்ப வேண்டும் நண்பர்களே இப்பனிக்காலத்தில் ஐந்தாவது கோப்பை மதுவை அருந்தும் என் உடல்மீது வெகு காலமாய் பிசுபிசுக்கும் என் துரதிஷ்ட ஆடைகளை யாராவது வாங்கிக் கொண்டால் நல்லது இத்தனைக்கும் வீடு திரும்ப விரும்பாத எனக்கு என் குழந்தைக்கும் காதலிக்கும் சொல்வதற்கு சுவாரசியமாக சில கதைகள் இருப்பதும் உண்மை எனவே இன்று ஒருநாள் என்னை யாராவது உங்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தீர்க்கதரிசிகள் கல்லெறிந்து விரட்டுபவர்கள் நிலத்திலிருந்தே தீர்க்கதரிசிகள் பிறக்கிறார்கள் தங்கள்மீது கல்லெறிபவர்களின் மீதும் முள்கிரீடத்தை சுமக்க சொல்பவர்கள் மீதும் ஏன் இத்தனை நேசமென்று உங்களைப்போல் அவர்களும் அறியாமல் இருந்திருக்கலாம் நேசம் எதையும் அறியாது என்பதை தர்க்கரீதியாக அவர்களுக்கு புரியவைக்க முயன்றவர்கள்தான் அவர்களுடைய கன்னத்தில் முத்தமிட்டு காட்டிக்கொடுத்தார்கள் தர்க்கமற்றவர்களும் நேசத்தின் காரணமாக முட்டாளாக்கும் பைத்தியமாக்கும் அனைத்தையும் நம்பியவர்களும் அவர்கள் அறியாமலேயே தீர்க்கதரிசியாகவே மாறியிருக்க வாய்ப்பும் இருக்கிறது நானும் நீங்களும் நேரத்துடன் அவரவர் கையிலிருக்கும் புத்தகத்தில் அவரவர் தர்க்கத்தை எடுத்துக்கொண்டு தீர்க்கதரிசிகளின் சந்நதிகளுக்கு செல்வோம் அங்கே தீர்க்கதரிசிகள் காட்டிக்கொடுக்கப்பட்ட காயங்களுடன் நமக்கு காட்சித்தரலாம் ஒரு வேளை அதில் அந்த ஒற்றை தீர்க்கதரிசி ஒரு கோப்பை ஒயினை அருந்திய படி நம்மை நோக்கியும் ஒரு கோப்பையை நீட்டலாம் அவர் அருகில் கல்லெறிந்து விரட்டப்பட்ட ஒரு வேசியும் கொத்துக்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஒரு சோளம் அல்லது ஒரு மஞ்சள் நிற மனிதன் ஊதாவும் மஞ்சளும் கலந்த அறையில் மினுமினுத்து அறைந்து மீண்டும் தாவி பற க்கும் வெ ளிச்சம் குடிக்கும் ப றவை கள் இன்றைய இரவில் எ தையோ தே டி தன் கூர் அ லகை சிலுப்பி சிலுப்பி என் அறையில் அ லை ந்து திரிந்தன அ ன்றி ரவில் என் னை அ டை யாளப்படுத்தும் பச் சை நிற பை ஜாமில் ஆறாவது எண் கொண்ட மனநல விடுதியின் மூ ன்றா வது அறையில் தன் காதை எனக்காக அறுத்துக் கொ டுக்க மறுத்த காதலி யைப்பற்றி வான்காவி ட ம் பே சிக் கொ ண்டிருந் தே ன் . அவன் மஞ்சள் ஊறிய தன் உடலை த் தொ ட்டு தொ ட்டு சுவரில் ஒரு சூரிய னை எழுப்பியபடி ஒருவார்த் தைக்கூட பே சாமல் கே ட்டுக் கொ ண்டிருந்தான் . அவன் விரல்களிலிருந்து சாரைப் பாம்பாக இறங்கி வந்த மஞ்சள் நி ற ம் என் னைப் போலவே யா ரோ ஒருவர் தன் னோ டு இத்த னை நாட்களாக வை த்திருந்து விட்டுச் சென்ற துணிப்பையாக தனித்திருந்தது . அது ஒரு வேளை வீட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட் ட மஞ்சள் நி ற பூ னை க்குட்டியாகயவா அல்லது வீசி எறியப்பட்ட அவித்த மஞ்சள் நி ற சோ ளமாக வோ இருக்கலாம் . என்றுமே தனித்திருப்பவர்க ள் மஞ்சள் நி ற நோ ய்கள் மஞ்சள் நி ற ஞ