தொலைதூரத்து பைன் மரங்கள் தொலைவில் பைன் மரங்கள் அங்குமிங்கும் அசைகின்றன பகல் பொழுது இரவாகிக்கொண்டிருக்கும் போது கிளைகள் சன்னல் கதவின் மீது வழுவற்று மோதுகின்றன அவை உணர்ச்சிகளை கிளர்த்தும் காற்றால் தள்ளப்படுகின்றன இப்பொழுது உயிர்பிழைக்க முடிந்த ஒரு மனிதன் நான் வெகு காலத்திற்கு முன்பாகவே நான் என் பால்யத்தை விட்டு விலகியிருந்தேன் முன்பொரு முறை எதுவோ ஒன்று அதில் இருந்திருந்தாலும் இப்பொழுது அதனால் எந்த ஒரு பிரயோஜனமுமில்லை இதுதான் வாழ்வு ஆனால் அது தோல்வியை தள்ளிப்போடுவது இளமையினுடைய கட்டுபாடற்ற காதலிலிருந்து உருவாகி தழைத்த ”அந்நியமாதல் ” கடைசியாக நாம் எதிர்ப்பின்றி உடன்படுவதற்கு முன்பாக எப்பொழுதும் அங்கே வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத எதுவோவொன்று இருக்குமென்ற ”அறிதல்” (Pines in the distance by CHIRIL ANWAR)
இடுகைகள்
அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அறிவிக்கை கட்டளையிடுவது என் உள்நோக்கமல்ல தலைவிதியென்பது பிரிதொரு தனிமைதான். மற்ற அனைவர்களுக்கும் மத்தியிலிருந்தே நான் உன்னை தேர்வுசெய்தேன் ஆனால் ஒரு கணத்தில் மீண்டும் ஒரு முறை நாம் தனிமையின் வலையில் சிக்கிகொண்டோம். நான் உன்னை உண்மையாகவே விரும்பிய தருணம் இருந்தது கோலாச்சும் இருளில் குழந்தைகளாக இருப்பதற்கு, மேலும் நாம் முத்தமிட்டுக்கொண்டோம் ,தழுவிக்கொண்டோம், சோர்ந்துபோகவில்லை. நான் ஒருபோதும் நீ என்னை விட்டுச் செல்ல விரும்பவில்லை உன்னுடைய வாழ்வை என்னுடன் பிணைத்துவிடாதே அதற்காக நான் மிக நீண்ட காலம் யாருடனும் இருக்க முடியாது. நான் இப்பொழுது பெயரில்லாத ஏதோ ஒரு கடலில் இருக்கும் ஒரு கப்பலின் மீது இருக்கிறேன். (Announcement by CHIRIL ANWAR)
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
சம்மதம் நீ விரும்பினால் உன்னை மீண்டும் அள்ளி எடுத்து என் இதயம் முழுமைக்குமாக நிரப்பிக்கொள்வேன் நான் இப்பொழுதும் தன்னந்தனியாகவேயிருக்கிறேன் எனக்குத் தெரியும் இப்பொழுது இருக்கும் நீ முன்பிருந்த நீ அல்ல ஒரு மலரைப் போல் பகுதி பகுதியாக பிய்த்து எடுக்கப்பட்டாகிவிட்டது. தவழ்ந்து செல்லாதே ! தைரியமாக என்னை உற்றுப்பார் நீ விரும்பினால் உன்னை மீண்டும் அள்ளி எடுத்துக்கொள்வேன் எனக்காக மட்டும் ஆனால் நான் ஒரு போதும் முகம்பார்க்கும் கண்ணாடியுடன் கூட அதை பகிரமாட்டேன் (Wiilingness by CHIRIL ANWAR)
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
என் நண்பனும் நானும் நாங்கள் ஒரே பாதையை பகிர்ந்துக்கொண்டோம் காலம் தாழ்த்திய இரவில் பனி ஊடுருவ மழை எங்கள் உடலை நனைத்தது கப்பல்கள் உறைந்து நிற்கின்றன துறைமுகத்தில் என் இரத்தம் புளித்துவிட்டது. மனம் இறுகிவிட்டது. அதை பேசுவது யார்? என் நண்பன் ஆனால் ஒரு எலும்பு கூடு அவனது உறுதியை அழைக்கழிக்கிறது அவன் நேரம் என்னவென்று கேட்கிறான்! மிகவும் தாமதமாகிவிட்டது அனைத்து அர்த்தங்களும் மூழ்கி அமிழ்ந்துவிட்டது மேலும் இங்கே இயக்கம் என்பது எவ்வித செயல்நோக்கமும் கொண்டிருக்கவில்லை “MY FRIEND AND I” BY CHIRIL ANWAR
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வேண்டாம் பெண்ணே ! வேண்டாம் பெண்ணே! என்னில் எது உயிர்த்திருக்கிறதோ அது இன்னும் எளிதாக உன்னுடைய அதீத உணர்ச்சிவயப்பட்ட கிளர்ச்சியற்ற தழுவலை விலக்கிச்செல்கிறது வேறொரு கடலின் பசுமையை கண்டறிவதையே உள்நோக்கமாக கொண்டிருக்கிறது நாம் முதன் முதலாக சந்திந்த கப்பலுக்கே திரும்பிச் சென்று கப்பலின் சுக்கானை காற்றிடம் ஒப்படைக்கிறது காத்திருக்கும் நட்சத்திரங்களின் மீது நம் கண்கள் நிலை குத்தியிருக்கின்றன எதுவோவொன்று தன் சிறகுகளை படபடவென்று அடித்துக்கொண்டு மீண்டும் தெரிவிக்கிறது தாய்-போ மற்றும் ஆம்போனீஸ் கடலின் இரகசியங்களை. இதுதான் பெண்ணே ! அனைத்து வகையிலும் என்னால் எழுத முடிந்த தெளிவில்லாத ஒரு வரி என்னுடைய விமானத்தில் மர்மமான அவளுடைய புன்னகையை நோக்கி செல்லும்போது (Ambonese- இந்தோனேசிய தீவு , TAI PO- ஹாங்காங் பகுதி நகரம்) “NO WOMAN” BY CHIRIL ANWAR
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பள்ளிவாசலில் நான் அவனை நோக்கி கத்துகிறேன் அவன் வரும் வரை நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்தித்தோம் அதன்பிறகு அவன் என் மார்பில் எரிக்கப்பட்டான் என் எல்லா வலிமையும் எரியும் அவனை அணைக்க போராடுகிறது என் உடல் முன்னோக்கி இயங்க இயலாதபடி வியர்வையுடன் அம்மணமாய் கிடக்கிறது இந்த அறைதான் நாங்கள் சண்டையிட்டுக்கொள்ளும் களம் இங்கே ஒருவரையொருவர் அழித்துக்கொள்கிறோம் ஒருவர் வசை சொற்களை அள்ளிவீச மற்றொருவர் பைத்தியமாக மாற “At THE masque” BY CHIRIL ANWAR
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நான் என் இறுதிநாள் வரும்பொழுது ஒருவரும் எனக்காக அழப்போவதில்லை நீயும் கூட சிந்தப்படும் கண்ணீரைப் பற்றியும் எந்தக் கவலையுமில்லை ! நான் ஒரு வன மிருகம் மந்தையிலிருந்து வெளியேற்றப்பட்டவன் துப்பாக்கி ரவைகள் என் தோலைத் துளைக்கலாம் ஆனால் நான் தொடர்ந்து என் வேலையைச் செய்வேன் என் காயங்களையும் வலிகளையும் எடுத்துக்கொண்டு முன்னேறிச் செல்கிறேன் தாக்குகிறேன் தாக்குகிறேன் துயரங்கள் மறையும் வரை நான் இனி எதைப்பற்றியும் கவலைப்பட போவதில்லை நான் இன்னொரு ஆயிரம் ஆண்டுகள் வாழவே விரும்புகிறேன் “ME” BY CHIRIL ANWAR
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
மழையெனும் கல் அதிகாலைக்கு முன்பாகவே அந்தக் கிழவன் தனது வழக்கமான இரவு தூக்கத்தை விட்டு எழுந்துவிட்டான் மேலும் மிக எளிதாக தனக்கு முன்பாக இருக்கும் புல்வெளியில் கிடந்த கல்லுக்குள்ளாக நழுவிச் செல்கிறான் அந்த கல்லுக்குள் நீல வண்ணமுடைய ஒரு துண்டுப் பகுதியை கண்டடைகிறான்: அது மழையின் இதயம், காலத்தால் முற்பட்டது காலத்தால் பேணி வளர்க்கப்பட்டது (RAIN STONE BY Joko Pinurbo )
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கூடை அவள் மழையின் நூலிழைகளைக் கொண்டு ஒரு கூடை முடைகிறாள் பிறகு அதை தாழ்வாரத்தில் மாட்டிவைக்கிறாள் அந்த கூடையின் உள்ளே அவன் அந்தியின் கருப்பையிலிருந்து உதித்த அவளுடைய குழந்தையை கிடத்துகிறான் ஒளிக்காக இரவுகள் தாகம் கொள்ளும்பொழுதெல்லாம் கூடையின் உள்ளிருந்த குழந்தை ஒளிர்கிறது பிறகு தாழ்வாரத்திலிருந்த அந்த கூடை ஏகாந்தத்தில் நிறைகிறது. (BASKET BY Joko Pinurbo) Joko Pinurbo is an Indonesian poet
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வியர்வை ஒவ்வொரு நாளும் என் தந்தை தனது வியர்வைத் துளிகளை ஒரு கண்ணாடி குப்பியில் சேகரித்தார் பிறகு அவற்றை குளிர்சாதனப் பெட்டியில் பதுக்கிவைத்தார் காய்ச்சல் வந்து என் உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது குளிர்ந்த தனது வியர்வைத் துளிகளை ஒரு கண்ணாடி கோப்பையில் ஊற்றி எனக்காக அருந்தக் கொடுப்பார் மடக்.. மடக்…காய்ச்சல் பறந்தோடிவிட்டது (SWEAT BY Joko Pinurbo)